வங்கி ரயில்வே போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவரா? இதோ இலவச பயிற்சி!

0
270
#image_title
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC), வங்கிப்  பணிகள், இரயில்வே பணிகள் ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படவுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயனடையும் வகையில் பணியாளர் தேர்வாணையம், வங்கித் தேர்வு, இரயில்வே தேர்வு ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு தர்மபுரியில் மே 10ஆம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://bit.ly/3LnfCum என்ற Google படிவத்தில் விண்ணப்பிக்கவும் அல்லது கீழ்கண்ட அலுவலர்களை தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள்/ அலுவலகங்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 9498042426 மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம் 9842857035 பணியாளர் மேலே மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்கள் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், காலதாமதமின்றி விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறு அனைத்து இளைஞர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
author avatar
Savitha