இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம்!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

மத்திய அரசின் மூலம் ஏழை எளிய குடும்பத்தினருக்கும் சிலிண்டர் பயன்பாடானது கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக சிலிண்டர்களை கொண்டு சேர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான பொருட்கள் :-

✓ கட்டாயமாக 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
✓ ஆதார் அட்டை
✓ ரேஷன் கார்டு
✓ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
✓ பேங்க் பாஸ் புக் ஜெராக்ஸ்
✓ வயது சான்றிதழ்
✓ மொபைல் எண்

விண்ணப்பிக்கும் முறை :-

மேலே கூறப்பட்ட பொருட்களுடன் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் http://www.pmuy.gov.in/ என்ற மத்திய அரசினுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நுழைந்து உஜ்வாலா யோஜனா என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பெண் அதில் கேட்கப்படும் செல்போன் எண் மற்றும் பயணருடைய அனைத்து தரவுகளையும் உள்ளீடு செய்து ஆவணங்களையும் உள்ளீடு செய்த விண்ணப்பித்து பயன்பெறலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இன்றைய காலகட்டத்தில் நகர்புறங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை அனைத்து இடங்களிலும் கேஸ் சிலிண்டரினுடைய பயன்பாடு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறி இருப்பதால் புதிதாக திருமணமானவர்கள் மற்றும் இதுவரை கேஸ் சிலிண்டர் இணைப்பு பெறாதவர்கள் இத்திட்டத்தின் கீழ் இணைந்து பயன்படலாம் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.