தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆண்கள் மற்றும் பெண்கள் தொழில் முனைவோராக மாற நினைக்கும் இளைஞர்கள் என அனைவருக்கும் நல்வழியை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு பல புதிய முயற்சிகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சென்னையில் ஏப்ரல் 28 முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இலவச ட்ரோன் பயிற்சி முகாம்கள் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த இலவச ட்ரோன் பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கலந்து கொள்ளலாம் என்றும் அவ்வாறு கலந்து கொள்ளக் கூடியவர்களுக்கு ட்ரோன் சம்பந்தப்பட்ட அனைத்து பயிற்சி வகுப்புகளும் மூன்று நாட்களில் கற்றுக் கொடுக்கப்படும் என்றும் இதற்கான வகுப்பு நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலவச ட்ரோன் பயிற்சி முகாமில் கற்றுத்தரப்படும் வகுப்புகள் :-
✓ ட்ரோன்களின் அடிப்படைகள்
✓ ட்ரோன் விதிமுறைகள் பற்றிய கண்ணோட்டம்
✓ ட்ரோன்களின் வகைகள் மற்றும் செயல்பாடுகள்
✓ பராமரிப்பு
✓ அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
✓ சிமுலேட்டர் மற்றும் நேரடி களப் பயிற்சி
✓ ட்ரோன் பாகங்களை இணைப்பது மற்றும் பிரிப்பது
✓ விமான கட்டுப்பாட்டு சென்சார் அளவுத்திருத்தம்
✓ கண்காணிப்பு மற்றும் மேப்பிங் ஒருங்கிணைப்பு
✓ ACT
✓ ரேடியோ டெலிபோனிக்
விண்ணப்பிக்கும் முறை :-
சுயதொழில் மேற்கொள்வதில் ஆர்வம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவ்வாறு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்றும் கட்டாயமாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களிலிருந்து வந்து பயிற்சி மேற்கொள்ள கூடியவர்களுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டியுடன் கூடிய அறைகளும் வழங்கப்படுகிறது எனவே அதற்கும் சேர்த்து விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலும் தகவல்களை அறிந்து கொள்ள www.editn.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று காணலாம். மேலும், இந்த பயிற்சியில் சேர நினைப்பவர்கள் கீழ்கண்ட முகவரியை அணுகலாம் :-
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை,
2 இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600032
தொலைபேசி எண்கள்: 9360221280 / 9543773337.