இலவச கண் சிகிச்சை முகாம்! முதன்மை மாவட்ட நீதிபதி தொடக்கம்!

Photo of author

By Rupa

இலவச கண் சிகிச்சை முகாம்! முதன்மை மாவட்ட நீதிபதி தொடக்கம்!

Rupa

Free Eye Care Camp! Principal District Judge begins!

இலவச கண் சிகிச்சை முகாம்! முதன்மை மாவட்ட நீதிபதி தொடக்கம்!

தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்கம் மற்றும் வாசன் ஐ கேர் இணைந்து மாவட்ட  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் சட்டப்பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு சஞ்சய் பாபா, கண் பரிசோதனை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தலைவர் சாந்தன கிருஷ்ணன் தலைமை வகித்தார்.செயலாளர் செல்வகுமார், பொருளாளர் ஆறுமுகம்,துணைத்தலைவர்கள் பாலமுருகன்,பாஸ்கரன்,இணை, துணை செயலாளர்கள் லோகநாதன், மகாலிங்கம் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் வீரசிகாமணி பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை ஊழியர்கள் தங்களது கண்களை இலவசமாக பரிசோதனை செய்துகொண்டனர்.