DMK: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய பெரும்பான்மையான நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி இருந்த வரை வழங்கி வந்த விலையில்லா மடிக்கணினி அதன் பின் வந்த திமுக எந்த ஆண்டு மாணவர்களுக்கும் தரவில்லை. இதேபோல இலவச பேக் புத்தகங்கள் பெண்களுக்கு தேவையான நாப்கின் உள்ளிட்ட அனைத்தையும் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது இது ஏதும் நடைமுறையில் இல்லை.
இதே போல மிதிவண்டி வழங்கவும் காலதாமதம் ஆனது. தொடர்ந்து இது ரீதியாக கோரிக்கை எழுப்பிய பின் பரிந்துரை செய்து மிதிவண்டி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அரசு பள்ளியில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி, மிதிவண்டி வழங்கும் நலத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன்பின் வரும் திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளிலும் மிதிவண்டி வழங்கப்படும் என கூறியுள்ளனர்.
ஆனால் தேர்தல் காலம் முடியும் சமயத்தில் அனைவருக்கும் மடிக்கணினி வழங்குவது ரீதியாக டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. அப்படி மடிக்கணினி வழங்கும் பட்சத்தில் தற்போது கடந்த ஆண்டு மாணவர்கள் அதற்கு முன்பு இருந்த மாணவர்கள் என அனைவருக்கும் கிடைக்குமா என்பது சற்று சந்தேகம்தான். கட்டாயம் தேர்தலுக்கு முன் லேப்டாப் வழங்கி ஆக வேண்டும் என்ற முடிவை தலைமை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அதிக வாய்ப்புள்ளதாம்.

