மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

0
154
Free laptops for students! Sudden announcement issued by the Chief Minister!
Free laptops for students! Sudden announcement issued by the Chief Minister!

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

கொரோனா தொற்று காரணமாக மக்கள் நலன் கருதி அந்தந்த மாநில அரசாங்கம் ஊரடங்கை அமல்படுத்தியது.அதனைத்தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கும் கல்லூரி மற்றும் பள்ளிகள் மூடப்பட்டது.அவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடந்த வண்ணமகதான் உள்ளது.இந்நிலையில் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.அதில் பல திட்டங்களுக்கு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.அந்த ஒப்புதல்கள் கீழ்க்கண்டவற்றில் காணலாம்:

இந்த கூட்டத்தில் ஆந்திரா முழுவதும் கால்நடைகளுக்கு மொபைல் ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அதனையடுத்து 9 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மடிக்கணினி விநியோகிக்கும் திட்டத்திற்கு அமச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ஆந்திரா கேசரி தங்குத்ரி பிரகாசம் பந்துலுவின் நினைவாக ஓங்கோல் புறநகரில் ஆந்திரா கேசரி வர்சிட்டி அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அதுமட்டுமின்றி விஜயநகரத்தில் உள்ள ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியை பல்கலைக்கழகம் போல் மாற்ற ஆந்திரா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

டிட்கோ சார்பில் ஏழைகளுக்கு பதினேலாயிரம் காலனிகளில் உள்ள மக்களுக்கு 15.06 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்றும் 2.62 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு பங்கீடு செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.அதனையடுத்து ஜகன்னா வீட்டுத்திட்டங்களுக்கு ஜூலை மாதம் 1 மற்றும் 3 தேதிகளில் அடித்தளம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.இத்தோடு பல நாட்களாக தண்ணீர் பிரச்சனை தீர்வின்றி நடந்த வண்ணமகதான் உள்ளது.ஆந்திராவிற்கு வர வேண்டிய தண்ணீர் பங்கிலும் தெலுங்கான அரசு மின் சாரம் தயாரித்து வருகிறது.அதனை எடுத்து கூறும் விதத்தில் கிருஷ்னா நதி நீர் வாரியத்திற்கு அமைச்சர் கடிதம் எழுதுமாறு அறிவுரை கூறினார்.அதனையடுத்து இந்த தண்ணீர் பிரச்சனையில் தெலுங்கான ஒருதனமாக நடந்து கொள்வது குறித்து நான் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன் என்றும் கூறினார்.

Previous articleதொட்டில் சேலையில் விளையாடிய பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்! பதறிய தாய்!
Next articleபேய்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!