இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தினை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
70 வயது மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்ச மதிப்பிலான இலவச சிகிச்சை பெற உதவும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தினை பிரதமர் மோடி அவர்கள் துவங்கி வைத்துள்ளார்.இந்த திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற தகுதியுடையவர்கள்.
இந்தத் திட்டத்திற்குத் தகுதியான ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இருந்தால், அவர்களுக்கிடையே ரூ. 5 லட்சம் சுகாதாரக் காப்பீடு பகிர்ந்து கொள்ளப்படும், அதாவது ஒரு குடும்பத்தின் அடிப்படையில் ரூ. 5 லட்சம் என்ற அளவிலான கவரேஜ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா அல்லது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்கள் அனைவருக்கும், 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சைக்கு தகுதியுடையவர்கள். மேலும் இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய தூத்துக்குடி மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் :-
✓ 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமகன் ஆதார் வைத்திருப்பது அவசியம்.
✓ தகுதியான மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் கார்டு பதிவு செய்வதற்கும் வழங்குவதற்கும் ஆதார் அடிப்படையிலான e-KYC கட்டாயமாகும்.
✓ 70 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள பயனாளிகள் பதிவு செய்த முதல் நாளிலிருந்தே இலவச சிகிச்சை பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
✓ எந்தவொரு நோய்க்கும் அல்லது சிகிச்சைக்கும் காத்திருக்கும் காலம் இல்லை என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.