அரசு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள்.!- அரசு அதிரடி அறிவிப்பு.!!

Photo of author

By Vijay

அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதத்திற்கு ஒரு முறை இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அம்மாநில அரசு அவ்வப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை இன்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார் . இத்திட்டத்தை குறித்து அதிகாரிகள் கூறுகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம் ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் இடைநிலை கல்லூரிகளில் படிக்கக்கூடிய சுமார் 10 லட்சம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10 சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு எடுப்பதை குறைக்கும் விதமாகவும், மாணவிகளின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மாநிலம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்த சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.