எழை மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான இலவச பயிற்சி
ஆரஞ்சு அம்மாள் நல்வழி ( Goodway) இலவச பயிற்சி மையம் இந்த மையமானது
தன்னுடைய நிலை யாருக்கும் வரக்கூடாது என்ற நோக்கத்தில் அரியலூர் மாவட்டம் பரணம் எனும் கிராமத்தில் திரு.பழனிசாமி அவர்களின் சீரிய முயற்சியால் கடந்த இரு வருடமாக பல்வேறு துறையில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டு அரசு பணியாளர் தேர்வுக்கு விடுமுறை நாட்களில் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் நீட் தேர்விற்கும் இலவசமாக பயிற்சி அளிக்க பட உள்ளது.
இந்த மையத்தில் இருந்து கடந்த வருடம் தமிழ்நாடு வன அலுவலர் (Forest officer) பணிக்கு ஒருவர் தேர்வாகினார்.
இந்த வருடம் செம்படம்பர் மாதம் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வான குரூப் 4 தேர்வில் 10 க்கும் மேற்ப்பட்டோர் தேர்ச்சி பெற உள்ள நிலையில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் 15 மாணவ – மாணவிகள் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள் அவர்களுக்கு தற்போது உடல் தகுதி தேர்விற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

தற்போது வரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மற்றும் காவலர் தேர்வுக்கும் மட்டுமே பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜீன் மாதம் நீட் தேர்விற்கும் இலவச வகுப்புகள் நடந்த முடிவு செய்யப்பட்டு அதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் 2 ஆசிரியர்கள் வீதம் 4 பாடங்களுக்கு 8 ஆசிரியர்கள் மேலும் கணிதப் பாடத்திற்கு 1 ஆசிரியர் என மொத்தம் சிறந்த அனுபவமிக்க 9 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் பணி நிறைவடைந்து கடந்த வாரம் (13-10-2019) நடைபெற்ற மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவில் விழாவில் அடுத்த மாதத்தில் இருந்து வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன் படி அடுத்தமாதம் அதாவது 02-11-2019 முதல் வகுப்புகள் தொடங்க உள்ளது
வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைவருக்கும் இலவசமாக தங்கி படிக்கும் வசதியையும் இந்த பயிற்சி மையம் ஏற்பாடு செய்துள்ளது.
தற்போது இந்த பயிற்சி மையத்தில் புதிய பாடத்திட்டதின் படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாகிய குரூப் -2 & 2A மற்றும் காவலர் தேர்விற்காக 90 க்கும் மேற்பட்ட மாணவ/மாணவியர்கள் படித்து வருகிறார்கள்.
நகரத்தை நோக்கி செல்லும் இந்த காலகட்டத்தில் ஒரு கிராமத்தில் மதுரை, திருவண்ணாமலை, கடலூர் ,சிவகங்கை, நாகை,தஞ்சாவூர், கடலூர்,விருதுநகர், கன்னியாகுமரி, சென்னை, திருநெல்வேலி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள் வந்து தங்கி படிப்பது அப்பயிற்சி மைய ஆசிரியர்களின் திறமைக்கு கிடைத்த வெற்றியாகும்

மேலும் இந்த பயற்சி மையத்தில் சேர்ந்து தொடர்ந்து 6 மாதம் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை எனில் ரூபாய் 10,000 அளிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் இந்த மையத்தின் நிர்வாக இயக்குனர்.
இது பற்றி நிர்வாக இயக்குனர் திரு.பழனிசாமி அவர்களிடம் கேட்ட போது படிக்க வசதி இல்லாத கிராமபுற ஏழை மாணவர்களை ஒரு அரசு அதிகாரியாக உருவாக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை அதற்காக தான் இந்த பயிற்சி மையத்தை உருவாக்கினேன். இன்று வரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மற்றும் காவலர் தேர்விற்கு தான் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்விற்கு பணம் கட்டி படிக்க வசதி இல்லாமல் தங்களுடைய மருத்துவ கனவை விட்டு விலகி செல்லும் பல மாணவர்களை பார்த்த பிறகு மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அதன் பின் தான் இத்தகைய செயலில் இறங்கி உள்ளோம்.
இங்கு மாணவ- மாணவிகள் படிப்பதற்கு தேவையான நூலக வசதியையும், பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ( Smart class) 58″ அளவுள்ள LED டிவி மற்றும் ஜெராக்ஸ் இயந்திரம் போன்ற அனைத்து வசதிகளையும் செய்து வைத்து இருக்கிறோம் இத்தகைய வாய்ப்பினை மருத்துவ கனவோடு இருக்கும் மாணவ – மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நீட் தேர்விற்கு இலவசமாக பயிற்சி மையம் அமைப்பது என்பது மிக எளிதான செயல் அல்ல அவற்றை எல்லாம் கடந்து தான் இந்த மையம் செயல்பட இருக்கிறது

தமிழகத்திலேயே நீட் தேர்விற்கு இலவசமாக பயிற்சி அளிக்க கூடிய மையமாக இதுவாக தான் இருக்கும் இத்தகைய வாய்ப்பை கிராமபுற ஏழை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
வளர்க மனித நேயம்!!
வாழ்க மனித இனம் !!
இந்த இலவச பயிற்சியை பயன்படுத்தி கொள்ள நினைப்பவர்கள் கீழுள்ள எண்ணில் அழைக்கவும்.
தொடர்புக்கு
திரு.பழனிசாமி :7010021004