பின் தங்கிய மற்றும் வாழ்க்கை பிழைகள் எதிர்கொண்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழக அரசனது ஒரு புதிய மற்றும் பயனுள்ள திட்டத்தை உருவாக்கியிருக்கிறது அதன்படி இலவச தையல் மெஷின் பெறுவதற்கு பெண்கள் தமிழக அரசின் உடைய திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திர திட்டத்தின் மூலமாக தையல் தெரிந்த பெண்கள் இலவசமாக தையல் மெஷின்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயது முதல் 40 வயதிற்குள் இருக்கக்கூடிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், இத்திட்டத்தில் தகுதி பெற குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்றும் விதவைகள் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள் :-
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அடையாள ஆவணம் வருமான சான்றிதழ் பிறப்பு சான்றிதழ் தையல் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் போன்றவற்றை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கக்கூடிய இ சேவை மையங்களுக்கு சென்று இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் இலவச தையல் மெஷின் ஆனது வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் உடைய இந்த திட்டத்தின் கீழ் பயன்பட நினைக்கக்கூடிய பெண்கள் உடனடியாக அருகில் இருக்கக்கூடிய இ சேவை மையங்களுக்கு தங்களுடைய அடையாள சான்றிதழ்களை எடுத்துச் சென்று விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.