இலவச ஸ்மார்ட் போன் திட்டம்!! மத்திய அரசு புதிய அறிவிப்பு!! 

0
28
Free Smart Phone Plan!! Central Government New Notification!!
Free Smart Phone Plan!! Central Government New Notification!!

இலவச ஸ்மார்ட் போன் திட்டம்!! மத்திய அரசு புதிய அறிவிப்பு!!

அனைத்து  மாநில அரசுகளும்  மக்களுக்கு பல திட்ட உதவிகளை  செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. மேலும் நாட்டு மக்களுக்கு மத்திய அரசும் பல திட்டங்களை அறிவித்து வருகிறது.

தமிழகத்தில் அரசு மக்களுக்கு உதவும் வகையில் கலைஞர் காப்பீடு திட்டம், நான் முதல்வன் திட்டம், இலவச அரிசி, பெண்கள் உரிமை திட்டம், இலவச பேருந்து திட்டம் போன்ற திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இதனால் நாட்டு மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

அதனை தொடர்ந்து பல போலியான தகவல்களும் அடிக்கடி இணையத்தில் பரவி வருகிறது.  இந்த நிலையில் மத்திய அரசு தற்போது அறிவிக்காத திட்டத்தை பற்றி சிலர் போலியான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.  இந்த போலி தகவல்கள் இணையனத்தில் வேகமாக பரவி வருகிறது.

தற்போது மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு ஸ்மார்ட் போன் வாங்க அரசு உதவதவாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவில் இலவச ஸ்மார்ட் போன் திட்டம் 2023, ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் மொபைல் வாங்க அரசு 10,200 ரூபாய் தருவதாக பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் மத்திய அரசு இந்த வீடியோ போலியானது என்றும்,  இது போன்று திட்டம் ஏதும் தற்போது இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்த தகவல் மக்களுக்கு அதிக அளவு  ஏமாற்றம் அளித்துள்ளது.

author avatar
Jeevitha