அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச ஸ்வட்டர்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

0
183
Free sweater for government school students!! The new order issued by the Tamil Nadu government!
Free sweater for government school students!! The new order issued by the Tamil Nadu government!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச ஸ்வட்டர்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இலவச நோட்டு புத்தகங்கள், இலவச சைக்கிள் என பலவற்றை மாணவர்களுக்கு கொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு பள்ளி சீருடை, புத்தகப் பை, போன்றவற்றையும் அளிக்கிறது. தற்பொழுது அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அறிவித்த நிலையில் அதனை செயல்படுத்தியும் வருகிறது. இந்நிலையில் மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்வட்டர் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இனி குளிர்காலம் வரும் வேளையில், மலைப்பகுதியில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வந்து படிக்க மிகவும் சிரமம் அடைவர். அவர்கள் சிரமப்படாமல் பள்ளிக்கு வந்து பாடங்களை பயில அவர்களுக்கு ஸ்வட்டர் வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த செயல்பாடானது இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் இந்த அறிவிப்பால் மலைவாழ் மாணவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Previous articleவிஷாலின் லத்தி படத்தின் ரிலீஸ் எப்போ?… கண்டுகொள்ளாத விஷால்… கடுப்பில் தயாரிப்பாளர்கள்!
Next articleவலைத்தளங்களை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை! அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!