விஷாலின் லத்தி படத்தின் ரிலீஸ் எப்போ?… கண்டுகொள்ளாத விஷால்… கடுப்பில் தயாரிப்பாளர்கள்!

0
113

விஷாலின் லத்தி படத்தின் ரிலீஸ் எப்போ?… கண்டுகொள்ளாத விஷால்… கடுப்பில் தயாரிப்பாளர்கள்!

விஷால் நடிப்பில் லத்தி என்ற திரைப்படம் அடுத்த ரிலீஸாக தயாராகி வந்தது.

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டானது. இவர் நடித்த செல்லமே, தாமிரபரணி, சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது ஆனால் ஒரு கட்டத்தில் டெம்ப்ளேட் படங்களில் சிக்கிக் கொண்டதால் அடுத்தடுத்து தோல்வி படங்களைக் கொடுத்து வருகிறார். கடைசியாக இவரின் ஹிட் படமாக இரும்புத்திரை திரைப்படம் அமைந்தது.

இந்நிலையில் எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விஷால் இப்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். துப்பறிவாளன் 2 என்ன நிலைமையில் இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்நிலையில் அவரின் அடுத்த ரிலீஸாக லத்தி திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த படம் ரிலீஸுக்கு தயாராகி வந்த நிலையில் பட வேலைகள் முடியாததால் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸில் விஷால் ஈடுபாடு காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஷால் மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த படத்தை விஷாலின் நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகியோர்தான் தயாரித்துள்ளார்கள் என்பதால் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.