சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!! இவர்களுக்கு மட்டும்தான்!!
சென்னையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. கூட்ட நெரிசலுக்காகவும், பயண நேரத்தை குறைக்கவும் இந்த மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த மாதம் மட்டும் 67 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். தினசரி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்திற்கும் அதிகமாகவே உள்ளது. மெட்ரோ ரயிலை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதற்கு புதிய புதிய சலுகைகளை நிர்வாகம் அறிவித்த வண்ணம் உள்ளது.
தற்போது பயண அட்டை முறை மற்றும் கியூ ஆர் கோடு மூலமாக டிக்கெட்டை எடுத்து கொள்கிறார்கள். மேலும் புதிதாக வாட்ஸ் அப் மூலமாகவும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என கூறி ஒரு பொது எண்ணையும் அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் மேலும் ஒரு சலுகையாக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள மக்கள் இலவசமாக மெட்ரோவில் பயணம் செய்யலாம்.
அதாவது ரயில் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளவர்கள் இந்த இலவச பயணத்தை மேற்கொள்ளலாம். உங்கள் ஆதார் கார்டில் உள்ள உங்கள் வீட்டு விலாசம், ரயில் நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்க வேண்டும். ஆனால் இந்த பயணம் அனைத்து நாட்களுக்கும் இல்லை. குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே பயணிக்கும் வகையில் இந்த இலவச டிக்கெட் வழகப்படும். அதாவது பண்டிகை போன்ற நாட்களில் வழங்கப்படலாம் என தெரிகிறது.