அடிக்கடி நெஞ்சு சுருக் சுருக்னு வலிக்குதா??உஷார் மாரடைப்பு அறிகுறியா இருக்கலாம்!!

0
65

அடிக்கடி நெஞ்சு சுருக் சுருக்னு வலிக்குதா??உஷார் மாரடைப்பு அறிகுறியா இருக்கலாம்!!

நெஞ்சு வலி வந்தால் என்ன செய்வது.நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள்.

காரணம் என்ன நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை.

1: ஒன்று ஆஞ்சைனா எனும் இதய வலி.

2: மற்றொன்று, மாரடைப்பு. இவற்றை எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படி அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

இதய வலி அறிகுறிகள்:

மாடிப் படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டால் அல்லது கிளிசரில் டிரைநைட்ரேட் மாத்திரையை நாக்கின் அடியில் வைத்தால் நெஞ்சு வலி குறைந்துவிடும்.

மாரடைப்பு அறிகுறிகள்:

சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத் திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பு .

யாருக்கு அதிக வாய்ப்பு புகைபிடிப்போர்

மது அருந்துவோர்

உயர் ரத்த அழுத்தம்

ரத்த மிகைக் கொழுப்பு நீரிழிவு நோய்

இதயத் தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள் உடற்பயிற்சி இல்லாதவர்கள். உடலுழைப்பே இல்லாதவர்கள்.

ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள்

பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு.

இவ்வகை நோய்களைப் போக்குவதற்கு இது செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

கிராம்பு

தேன்

வெற்றிலை

சின்ன வெங்காயம்

சுண்ணாம்பு

செய்முறை:

1: முதலில் மூன்று சின்ன வெங்காயத்தை எடுத்து சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.

2: பின்பு உரலில் நறுக்கிய சின்ன வெங்காயம் ஏழு கிராம்பு மற்றும் ஒரு வெற்றிலை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

3: இவை அரைத்தவுடன் ஒரு துணியில் அதனை வடிகட்டி அதன் சாரை எடுத்துக் கொள்ளவும்.

4: அந்த சாருடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

5: பின்பு சுண்ணாம்பை எடுத்து எந்த பக்கம் நெஞ்சு வலி இருக்கிறதோ அந்த இடத்தில் சுண்ணாம்பை தேய்த்துக் கொள்ளவும். அதனை ஐந்து நிமிடம் நன்றாக காய வைத்துக் கொள்ளவும்.

6: பிறகு நாம் கலந்து வைத்த அந்த கலவையை எடுத்து அந்த சுண்ணாம்பின் மீது ஒரு ஒரு சொட்டுகளாய் விட்டு நன்றாக தேய்த்துக் கொள்ளவும். இதனை ஒரு பத்து நிமிடம் அப்படியே வைத்துக் கொள்ளவும்.

இதுபோன்று நாம் செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட வலியாக இருந்தாலும் உடனடியாக தீர்ந்துவிடும்.

author avatar
Parthipan K