அடிக்கடி துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுகிறதா? இதை செய்து வாயுத் தொல்லைக்கு குட் பாய் சொல்லுங்கள்!!

Photo of author

By Divya

மனிதர்களுக்கு வாயுப் பிரச்சனை தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்துகிறது.உண்ட உணவு செரிக்காமை,மலத்தை கழிக்காமல் அடக்கி வைப்பது,வாயுக்களை உண்டாக்கும் உணவுகளை அதிகளவு உட்கொள்வது,உடல் பருமன் போன்ற காரணங்களால் துர்நாற்றத்துடன் கூடிய வாயுக்கள் வெளியேறுகிறது.அது மட்டுமின்றி சத்தமாக வாயுக்கள் வெளியேறுவதற்கும் இது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.இந்த வாயுத் தொல்லையில் இருந்து விடுபட கீழ்கண்ட வீட்டு வைத்தியங்கள் தக்க சமயத்தில் கை கொடுக்கும்.

1)ஓமம்
2)மோர்

ஒரு தேக்கரண்டி ஓமத்தை வாணலியில் போட்டு வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த ஓமப் பொடியை ஒரு கிளாஸ் மோரில் கலந்து குடித்தால் வாயுத் தொல்லை கட்டுப்படும்.

1)மோர்
2)இஞ்சி

ஒரு கப் அளவு பசு மோர் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.இந்த இஞ்சி துண்டுகளை மோரில் கலந்து குடித்தால் வாயுத் தொல்லை முழுமையாக கட்டுப்படும்.

1)சுக்கு
2)மிளகு
3)இஞ்சி

ஒரு கப் நீரில் ஒரு துண்டு சுக்கு,இரண்டு கருப்பு மிளகு மற்றும் ஒரு துண்டு இடித்த இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வாயுத் தொல்லைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

1)மோர்
2)பெருங்காயத் தூள்
3)உப்பு

ஒரு கப் பசு மோரில் 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள் மற்றும் 1/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து கலக்கி பருகினால் துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது கட்டுப்படும்.

1)சீரகம்
2)தண்ணீர்

தினமும் காலையில் ஒரு கப் தண்ணீரில் 1/4 தேக்கரண்டி சீரகத் தூள் சேர்த்து கலக்கி குடித்தால் வாயுத் தொல்லை தீரும்.