Breaking News, Health Tips

Frequent Urination: அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? இதனை சரிசெய்ய எளிமையான வீட்டு வைத்தியம்!!

Photo of author

By Divya

Frequent Urination: அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? இதனை சரிசெய்ய எளிமையான வீட்டு வைத்தியம்!!

உங்களில் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும்.சிலருக்கு அவசரம் தாங்க முடியாமல் சிறுநீர் வெளியேறும்.உங்களுக்கு இந்த அனுபவம் வாழ்நாளில் ஒருமுறையாவது ஏற்பட்டிருக்கும்.இவ்வாறு சிறுநீர் வெளியேறும் போது அடிவயிற்றுப் பகுதியில் வலி,எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

அடிக்கடி சிறுநீர் வருவதற்கான காரணங்கள்:

1)சிறுநீர் பையில் அதிகளவு வெப்பம் இருத்தல்

2)சிறுநீர் பாதை தொற்று

3)நீரிழிவு நோய்

4)மதுப்பழக்கம்

5)அதிகளவு டீ,காபி குடித்தல்

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

*மாதுளை தோல்

ஒரு மாதுளை பழத்தின் தோலை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி நீரில் கலந்து குடித்து வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை சரியாகும்.

*எள் + ஓமம்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி எள் மற்றும் ஒரு தேக்கரண்டி ஓமத்தை போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.பிறகு இதை ஆறவிட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடியில் சிறிது வெல்லத்தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

*கொள்ளு + வெல்லம்

25 கிராம் கொள்ளு பருப்பை வாணலியில் போட்டு வறுக்கவும்.பிறகு இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.இந்த கொள்ளுப்பொடியில் சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை சரியாகும்.

*எலுமிச்சை சாறு

தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு அருந்தி வந்தால் சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுக் கிருமிகள் அழிந்து அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வுக்கு தீர்வு கிடைக்கும்.

STROKE: இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடாதீர்கள்!! பக்கவாதம் வருவதை தடுக்க சூப்பர் டிப்ஸ்!!

ஒரே ஒரு வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினால்.. வாழ்நாளில் தைராய்டு என்ற பேச்சுக்கே இடமிருக்காது!!