அடிக்கடி கொட்டாவி வருவது இந்த நோய்க்கான அறிகுறிகளா இருக்கலாம்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Photo of author

By Divya

அடிக்கடி கொட்டாவி வருவது இந்த நோய்க்கான அறிகுறிகளா இருக்கலாம்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

மனிதர்களுக்கு கொட்டாவி வருவது இயல்பான ஒன்று தான்.தங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செய்யும் பொழுது சலுப்பு ஏற்பட்டால் கொட்டாவி வரும்.பள்ளிகளில் கணக்கு பாட வகுப்பில் பெருமபாலானோர் கொட்டாவி விட்டுருப்பீர்.ஏன் இதை படிக்கும் பொழுது கூட சிலர் கொட்டாவி விட்டுருப்பீர்கள்.

சிலருக்கு நல்ல தூக்கம் இல்லை என்றால் அடிக்கடி கொட்டாவி விடுவார்கள்.ஆனால் இந்த கொட்டாவி சாதாரண ஒன்று தான் என்று கடந்து விட முடியாது.அடிக்கடி கொட்டாவி ஏற்பட்டலோ,காரணமின்றி கொட்டாவி ஏற்பட்டாலோ உடலில் நோய் பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம்.

அடிக்கடி கொட்டாவி வருவதற்கான காரணங்கள்:-

நம் மூளையில் உள்ள இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டாலோ,அலர்ஜி ஏற்பட்டாலோ அடிக்கடி கொட்டாவி உண்டாகும்.

கல்லீரலில் நோய் பாதிப்பு ஏற்பட்டால் அடிக்கடி கொட்டாவி ஏற்படும்.கொட்டாவி பற்றிய சிந்தனை தோன்றினாலும் கொட்டாவி ஏற்படும்.

கை,கால் வலிப்பு பிரச்சனை இருப்பவர்களுக்கு அதிகளவு கொட்டாவி வரும்.

தூக்கம் வருவதற்கு மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கும்,பிற நோய்களுக்கு மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கும் அடிக்கடி கொட்டாவி ஏற்படும்.காரணம் தொடர்ந்து மாத்திரை உட்கொள்வதால் நரம்பு மற்றும் தசைகளில் தளர்வு ஏற்பட்டு கொட்டாவி உண்டாகிறது.

நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க வில்லை என்றாலும் உடலில் அதிகப்படியான சோர்வு ஏற்பட்டாலும் அடிக்கடி கொட்டாவி ஏற்படும்.