கோடை காலத்தில் நமக்கு இளநீர்தான் சூட்டை தணிக்கும் மருந்தாக திகழ்கிறது.வெயிலை தணிப்பதோடு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அருமருந்தாக இளநீர் உள்ளது.செயற்கை குளிர்பானங்களை குடித்தால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.
இளநீர் குடித்தால் வயிறு எரிச்சல்,தோல் தொடர்பான பாதிப்புகள் நீங்கும்.ஆனால் அதே இளநீர்தான் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு பொருளாக இருக்கின்றது.உடலில் உள்ள சில நோய்களுக்கு இளநீர் ஆரோக்கியமற்றவையாக மாறுகிறது.
சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் இளநீர் குடித்தால் பாதிப்பு இன்னும் அதிகமாகிவிடும்.இளநீரில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது.சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் இளநீர் பருகுவதை தவிர்க்க வேண்டும்.
இளநீர் ஆரோக்கிய பானம் என்றாலும் இதில் அதிக கலோரி நிறைந்து காணப்படுகிறது.எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.இளநீரில் உள்ள கலோரி உடல் எடையை அதிகரித்துவிடும்.
இளநீர் குடித்தால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.இளநீரில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இளநீரை அவசியம் தவிர்க்க வேண்டும்.சிலருக்கு இளநீர் அலர்ஜி பிரச்சனையை உண்டாக்கும்.இளநீர் அலர்ஜி இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.சளி,மூக்கடைப்பு,மூக்கு ஒழுகுதல்,தும்மல் போன்ற அலர்ஜி ஏற்படும்.உடற்பயிற்ச்சி செய்த பிறகு இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.இதனால் உடல் எடை அதிகரித்துவிடும்.எனவே இளநீர் நல்லது என்றாலும் அதை அளவாக எடுத்துக் கொள்வதுதான் நல்லது.