ESIC மருத்துவமனையில் மாதம் ரூ.92,300/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!!
தமிழகத்தில் உள்ள ESIC மருத்துவமனையில் காலியாக உள்ள ECG Technician, Junior Radiographer, Junior Medical Laboratory Technologist, OT Assistant, Pharmacist (Allopathic), Pharmacist (Ayurveda), Radiographer உள்ளிட்ட /பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வகை: அரசு பணி
நிறுவனம்: ESIC
பணியிடம்: தமிழ்நாடு
பணி:
*ECG Technician – 6
*Junior Radiographer – 17
*Junior Medical Laboratory Technologist – 15
*OT Assistant – 10
*Pharmacist (Allopathic) – 4
*Pharmacist (Ayurveda) – 2
*Radiographer – 2
மொத்த காலியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 56 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Diploma/ Degree in pharmacy படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்சம் 25 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாத சம்பளம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.21,700/- முதல் ரூ.92,300/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம்: ரூ.500/-
SC/ ST/ PWD/ முன்னாள் ராணுவத்தினர்/ பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம்: ரூ.250/-
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Phase-I Written Examination மற்றும் Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
விண்ணப்பிக்கும் முறை: நேரடி முறை
இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள்
https://www.esic.gov.in/ என்ற இணையதள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு அவற்றை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கடைசி தேதி: 30-10-2023