சேலத்தில் அதிர்ச்சி.. பண மோசடியில் ஈடுபட்ட பெண் “விசிக நிர்வாகி”!!

0
30
#image_title

சேலத்தில் அதிர்ச்சி.. பண மோசடியில் ஈடுபட்ட பெண் “விசிக நிர்வாகி”!!

சேலம் பச்சப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி. இவர் சேலம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துனைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். இவர் பச்சப்பட்டி பகுதியில் உள்ள பல பெண்களிடம் தாட்கோ வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி சுமார் ரூ.5 லட்சம் வரை பணமோசடி செய்துள்ளார் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தாட்கோ மட்டுமின்றி மகளிர் சுய உதவிக்குழு அமைத்து தேசிய வங்கிகள் மூலம் பல கோடி கடன் பெற்று தருவதாக அப்பகுதி பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி செயலில் ஈடுபட்டு இருக்கிறார்.

இந்த மோசடி பணம் போதாதென்று தன்னை சமூக நலத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களிடம் கைவரிசையை காட்டி இருக்கிறார்.

மேலும் தமிழகத்தை ஆளும் திமுகவின் கூட்டணி கட்சி விசிக என்பதினால் இவரின் மோசடி செயல் பல ஆண்டுகளாக வெளி வராமல் இருந்துள்ளது. ஆனால் இவர் போலி அரசு அதிகாரி, அரசு வேலை மற்றும் குறைந்த வட்டியில் அதிக கடன் பெற்று தருவதாக கூறி தொடர்ந்து நூற்றுக்கணக்கான நபர்களை தனது மோசடி வலையில் அழகாக சிக்க வைத்துள்ளார் என்பதை இவரால் ஏமாற்றப்பட்ட பெண்கள் கண்டறிந்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர், விசிக பெண் நிர்வாகியின் குற்றச்செயலை ஆதாரத்துடன் மக்களுக்கு நிருபித்து அவரின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்பதற்காக சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி அவர்களிடம் புகார் அளித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரை விரிவாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவு ஒன்றை விஜயகுமாரி பிறப்பித்தார். இதன் பின்னர் இந்த புகார் குறித்த வழக்கு தீவிரமானது. குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி தலைமையிலான டீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துனைச் செயலாளர் காயத்ரியை தீவிரமாக வலை வீசி தேடி வந்தனர்.

இவரின் மோசடி செயல் குறித்து பலரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பண மோசடியில் காயத்ரிக்கு உடந்தையாக இருந்த அவரது கார் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது தற்பொழுது தெரிய வந்துள்ளது. அதுமட்டும் இன்றி விசிக மற்றும் திமுகவின் சில முக்கிய புள்ளிகள் இவருக்கு உடந்தையாக இருந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனால் காயத்ரி இன்னும் வேறு சில மோசடிகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்று அவரை கைது செய்து விசாரிக்கும் முனைப்பில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி தலைமையிலான டீம் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சென்னை அசோக் நகர் பகுதியில் அமைந்துள்ள விசிகவின் தலைமை அலுவலகத்தில் காயத்ரி தஞ்சம் அடைந்திருப்பது தெரியவந்தது. இதனால் தாமதிக்காமல் சென்னை விரைந்த காவல் துறையினர் விசிக அலுவலகத்தில் நுழைந்து பண மோசடியில் ஈடுபட்ட காயத்ரியை அதிரடியாக கைது செய்தனர்.

இதை தோடர்ந்து குற்றப்பிரிவு காவலர்கள் சேலம் நீதிமன்றத்தில் காயத்ரியை ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைந்தனர். பண மோசடி மட்டுமின்றி நிலம் தொடர்பான மோசடியில் ஈடுபட்டு சுமார் ரூ.30 லட்சம் வரை சுருட்டி இருக்கிறார் என்பது காவலர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் இந்த வழக்கை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல காவல் துறை முடிவெடுத்து இருப்பதாகவும் இதற்காக பாதிக்கப்பட்ட பெண்கள், நபர்கள் புகார் கொடுக்க சேலம் மாநகர காவல் துறையை அணுகலாம் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தீவிர விசாரணைக்கு பின்னரே காயத்ரியின் மோசடி செயல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த முக்கிய புள்ளிகள் குறித்த தகவல் கிடைக்கப்பெறும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்து இருக்கின்றனர்.