ஹர்பஜன் சிங் அர்ஜுன் நடித்துள்ள பிரண்ட்ஷிப் படம் டீசர் வெளியானது

Photo of author

By Parthipan K

ஹர்பஜன் சிங் அர்ஜுன் நடித்துள்ள பிரண்ட்ஷிப் படம் டீசர் வெளியானது

Parthipan K

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங் முதல் முறையாக தமிழில் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்னும் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் மிக சிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த பஞ்சாபை சேர்ந்த ஹர்பஜன் சிங் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். பிரன்ட்ஷிப் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு எதிர்மறையான வேடத்தில் நடித்துள்ளார். அதேபோல் சதீஷ், குக் வித் கோமாளி பாலா, பிக் பாஸ் புகழ் லாஸ்லியா ஆகியோரும் இந்த படத்தில் ஹர்பஜன் சிங் உடன் நடித்துள்ளனர்.

கல்லூரி காலங்களில் ஏற்படும் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் யூடியூப் இணையதளத்தில் வெளியான இந்த படத்தின் டீஸரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.