உங்களுடைய முக்கிய ஆவணங்கள் அதாவது ஆதார் அட்டை பாஸ்போர்ட் பான் கார்டு கல்வி சான்றிதழ்கள் போன்றவை தொலைந்து விட்டது என்றால் அதற்காக கவலை கொள்ளவோ அல்லது அலைந்து திரிந்து வாங்க வேண்டும் என்பது போன்று என்னமோ வேண்டாம். வீட்டில் இருந்தபடியே கீழுள்ளவற்றை பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய முக்கிய ஆவணங்களின் உடைய நகல்களை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.
✓ ஆதார் அட்டை :-
UIDAI என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகுவதன் மூலம் உங்களுடைய ஆதார் எண்ணை அல்லது ஆதார் அட்டையை ஓடிபி அல்லது பயோமெட்ரிக் மூலமாக சுலபமாக பெற்றுக் கொள்ள முடியும்.
✓ பாஸ்போர்ட் :-
உங்களுடைய பாஸ்போர்ட் தொலைந்து விட்டது என்றால் அதை குறித்த கவலை கொள்ளாமல் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த அதனுடைய எஃப் ஐ ஆர் நகலை பெற்றுக் கொள்ளுங்கள். அதன்பின் அந்த நகலை பயன்படுத்தி பாஸ்போர்ட் சேவா மையத்தில் நகல் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்பு பாஸ்போர்ட் சேவா கேந்திரியை பார்வையிடுவதன் மூலம் உங்களுடைய பாஸ்போர்ட் சரிபார்ப்பு மற்றும் செயலாக்கத்தை காண முடியும்.
✓ பான் கார்டு :-
NSDL என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 49A என்ற விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்வதன் மூலம் உங்களுடைய பணத்தை மீண்டும் உங்களுடைய முகவரிக்கு அனுப்பப்படும்.
✓ ஓட்டுநர் உரிமம் :-
உங்களுடைய ஓட்டுனர் உரிமம் தொலைந்து விட்டால் முதலில் காவல் நிலையத்திற்கு சென்று எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்பு சாரதி இணையதளத்தின் மூலமாக நகல் ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதனை சரிபார்க்க மற்றும் அதனுடைய செயலாகத்தை காண RTO அலுவலகத்தை அணுகவும்.
✓ பிறப்புச் சான்றிதழ் :-
உங்களுடைய பிறப்பு பதிவு செய்யப்பட்ட மாநகராட்சி அல்லது நகராட்சி அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று அங்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கட்டணத்துடன் கொடுப்பதன் மூலம் உடனடியாக உங்களுடைய நகல் பிறப்பு சான்றிதலானது உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.
✓ திருமணச் சான்றிதழ் :-
திருமண சான்றிதழுக்கும் பிறப்பு சான்றிதழ் போலவே உங்களுடைய திருமணம் எங்கு பதிவு செய்யப்பட்டதோ அந்த இடத்திற்கே சென்று விவரங்களை தெரிவித்து அதற்கான கட்டணங்களை செலுத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது கொடுப்பதன் மூலம் உங்களுடைய திருமண சான்றிதழின் நகலை பெற்றுக் கொள்ள முடியும்
✓ கல்விச்சான்றிதழ் :-
உங்களுடைய தொலைந்த பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ்களை மீண்டும் பெற நீங்கள் படித்த பள்ளி அல்லது கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று விவரங்களை தெரிவித்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுப்பதன் மூலம் கல்வி சான்றிதழ்களின் நகல்களை பெற்றுக் கொள்ள முடியும்.