இரத்த சோகை முதல் சர்க்கரை நோய் வரை.. உடல் நோய்களை குணப்படுத்தும் முள் பழம்!!

Photo of author

By Divya

இரத்த சோகை முதல் சர்க்கரை நோய் வரை.. உடல் நோய்களை குணப்படுத்தும் முள் பழம்!!

Divya

அயல் நாடுகளில் இருந்து நம் இறக்குமதி செய்யப்பட்ட ஒருவகை பழ ரகம் டிராகன்.இந்த பழம் மஞ்சள் மற்றும் அடர் ரோஸ் நிறத் தோலை கொண்டிருக்கும்.இதன் சதைப்பற்று பிங்க் மற்றும் வெள்ளை நிறத்திலும் விதை எள் வடிவத்திலும் இருக்கும்.

இந்த பழத்தை பெரும்பாலானோர் ருசித்திருக்க வாய்ப்பில்லை.தற்பொழுது தான் இதுபோன்ற அயல்நாட்டு பழங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.இந்த டிராகன் பழச்செடி தோற்றத்தில் கள்ளி செடியை ஒத்திருக்கும்.இந்த பழத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.

டிராகன் பழ ஊட்டச்சத்துக்கள்:

*புரதம் *கொழுப்பு *நார்ச்சத்து *கலோரிகள் *கார்போஹைட்ரேட்

டிராகன் பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:

1)இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

2)உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க இந்த பழம் உதவுகிறது.இந்த பழம் ஒன்று சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும்.

3)டிராகன் பழத்தை சாப்பிட்டால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் இந்த பழத்தை உட்கொண்டால் உரிய பலன் கிடைக்கும்.

4)இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் கீல்வாதம் குணமாகும்.அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் இந்த பழத்தை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

5)சருமம் சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாக டிராகன் பழத்தை சாப்பிடலாம்.நீரிழிவு நோய் கட்டுப்பட டிராகன் பழத்தை சாப்பிடலாம்.

6)உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை இந்த டிராகன் பழம் கட்டுப்படுத்துகிறது.

7)டிராகன் பழத்தில் இருக்கின்ற வைட்டமின் சி சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

8)செரிமானக் கோளாறு இருப்பவர்கள் உணவிற்கு பிறகு டிராகன் பழத்தை உட்கொள்ளலாம்.இதில் இருக்கின்ற நார்ச்சத்து செரிமானப் பிரச்சனையை போக்க உதவுகிறது.இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.டிராகன் பழத்தை புதினா,தயிர் போன்றவற்றை சேர்த்து மைய்ய அரைத்து சாப்பிடலாம்.அதேபோல் இதை ஜூஸ் வடிவிலும் சாப்பிடலாம்.