இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் இரத்த சோகை பாதிப்பு ஏற்படும.இரத்தம் தொடர்பான பிரச்சனைகளை அனுபவித்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை செய்து பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.இந்த ஜூஸால் முடி உதிர்வு,சருமம் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)கேரட் – ஒன்று
2)பீட்ரூட் – ஒன்று
3)கறிவேப்பிலை – ஒரு கொத்து
4)மாதுளம் பழம் – ஒன்று
5)தண்ணீர் – தேவையான அளவு
6)பேரிச்சம் பழம் – இரண்டு
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கேரட் எடுத்துக் கொள்ளுங்கள்.அதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.அடுத்து ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு மிக்சர் ஜாரை எடுத்து நறுக்கிய கேரட் மற்றும் பீட்ரூட்டை அதில் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் ஒரு மாதுளம் பழத்தின் விதைகள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு இரண்டு பேரிச்சம் பழத்தை விதை நீக்கிவிட்டு அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து தினமும் ஒரு கிளாஸ் பருகுங்கள்.இந்த ஜூஸை குடித்து வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
உங்கள் சரும நிறம் மாற,முடி வளர்ச்சி அதிகரிக்க இந்த ஜூஸை பருகலாம்.இரத்த சோகை பாதிப்பில் இருந்து மீள இந்த ஜூஸ் பெரிதும் உதவியாக இருக்கும்.
மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:-
1)ஆப்பிள் – ஒன்று
2)கேரட் – ஒன்று
3)பீட்ரூட் – ஒன்று
4)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் ஆப்பிள்,கேரட் மற்றும் பீட்ரூட்டின் தோலை நீக்கி கொள்ளுங்கள்.பிறகு இவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
சருமம் தொடர்பான பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.இந்த ஜூஸை பருகி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.