பித்தம் முதல் இதய நோய் வரை.. இந்த இரண்டு காயை பச்சையாக அரைத்து குடிங்க!!

0
123

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் காய்களான கொத்தவரை மற்றும் அவரைக்காயை உணவாக எடுத்துக் கொண்டால் என்னென்ன நோய்கள் குணமாகும் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு காய்கறிகளை வைத்து ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

அவரைக்காயில் அடங்கியுள்ள சத்துக்கள்:

**பொட்டாசியம்
**புரதம்
**கனிமச்சத்துக்கள்
**வைட்டமின்கள்
**நார்ச்சத்து

கொத்தவரை காயில் அடங்கியுள்ள சத்துக்கள்:

**நார்ச்சத்து
**புரதச்சத்து
**நீர்ச்சத்து
**கால்சியம்
**இரும்புசத்து
**வைட்டமின் சி
**வைட்டமின் ஏ
**சர்க்கரை சத்து
**கார்போஹைரேட்

தேவையான பொருட்கள்:-

1)கொத்து அவரைக்காய் – 10
2)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
3)அவரை பிஞ்சு – ஐந்து
4)உப்பு – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் பத்து கொத்து அவரைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.கொத்து அவரைக்காயில் நார் வரும் அதை நீக்கிவிட்டு வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து பிஞ்சு அவரைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு பாத்திரத்தில் இந்த இரண்டு காய்களையும் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்யுங்கள்.

காய்கறிகளில் இராசயன மருந்து வாசனை இருந்தால் தண்ணீரில் மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து சுத்தம் செய்யலாம்.

பிறகு இந்த இரண்டு காய்களையும் மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பாதி எலுமிச்சையின் சாறை அவரைக் காய் ஜூஸில் பிழிந்துவிட வேண்டும்.

அடுத்து சிட்டிகை அளவு உப்பை அதில் போட்டு கலந்து பருக வேண்டும்.இந்த ஜூஸ் உடலில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.

மாரடைப்பில் இருந்து காத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த அவரை கொத்தவரை ஜூஸ் செய்து பருகலாம்.சர்க்கரை நோயாளிகள் இந்த ஜூஸ் செய்து பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க இந்த இரண்டு காய்களை அரைத்து பருகலாம்.பித்த அளவு அதிகரித்துவிட்டால் அதை குறைக்க அவரை மற்றும் கொத்து அவரையை அரைத்து அரைத்து ஜூஸாக பருகி வரலாம்.இவை இரண்டிலும் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.

எலும்பு தேய்மானம்,மூட்டு வலி,முதுகு தண்டுவட வலியை அனுபவித்து வருபவர்கள் கொத்தவரை மற்றும் அவரையை கொண்டு ஜூஸ் செய்து பருகி வரலாம்.

Previous articleசமையலறையில் நடமாடும் கரப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்த.. நான்கு பல் பூண்டு போதும்!!
Next articleஉண்ட உணவு உடனே செரிமானமாக.. இந்த பருப்பை வாயில் போட்டு மெல்லுங்கள்!!