உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய பொருள் பூண்டு.உடலுக்கு பல நன்மைகளை இது வழங்குகிறது.பூண்டு பற்களை பச்சையாகவோ அல்லது வறுத்தோ சாப்பிட்டு வந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வறுத்த பூண்டு பற்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1)இரத்த அழுத்தப் பிரச்சனை சரியாக வறுத்த பூண்டு பற்களை உட்கொள்ளலாம்.இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை பூண்டுக்கு உண்டு.
2)உடலில் படிந்து கிடக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க பூண்டு பற்களை சாப்பிடலாம்.தினமும் ஒரு பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
3)குடலில் இருக்கின்ற கழிவுகளை அகற்ற பூண்டு பற்களை வறுத்து சாப்பிடலாம்.இரைப்பையில் இருக்கின்ற புண்களை குணப்படுத்த வறுத்த பூண்டு பற்களை சாப்பிடலாம்.
4)இதய ஆரோக்கியம் மேம்பட பூண்டு பற்களை சாப்பிடலாம்.பூண்டு பற்களை சாப்பிட்டால் பல் ஆரோக்கியம் மேம்படும்.
5)செரிமானப் பிரச்சனை நீங்க பூண்டு பற்களை வறுத்து சாப்பிடலாம்.வாயுத் தொல்லையை போக்க பூண்டு பற்களை உட்கொள்ளலாம்.
6)கல்லீரலில் தேங்கிய கழிவுகளை அகற்ற பூண்டு பற்களை சாப்பிடலாம்.பூண்டு சாறு கல்லீரல் கொழுப்பை கரைக்க உதவுகிறது.
7)உடலில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்க பூண்டு பற்களை சாப்பிடலாம்.பூண்டு பற்களை வறுத்து சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.
8)தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு பற்களை வறுத்து தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.பூண்டு பற்களை நெயில் வறுத்து சாப்பிட்டால் உடலில் வைரஸ் தொற்றுகள் பரவாமல் இருக்கும்.