நெஞ்சு சளி முதல் குடற்புழு பிரச்சனை வரை.. இந்த காயை நசுக்கி கசாயம் செய்து குடித்தால் தீர்வு கிடைக்கும்!!

Photo of author

By Divya

நெஞ்சு சளி முதல் குடற்புழு பிரச்சனை வரை.. இந்த காயை நசுக்கி கசாயம் செய்து குடித்தால் தீர்வு கிடைக்கும்!!

அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த கசப்பு சுவை கொண்ட சுண்டைக்காய் உடலில் உள்ள பல நோய் பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது.சுண்டைக்காயில் கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் பி,சி,இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது.இதை இடித்து கசாயம் செய்து குடித்து வந்தால் மூல நோய்,சளி,வயிற்றுபுண் உள்ளிட்ட பல நோய்கள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)சுண்டைக்காய்
2)சுக்கு
3)கருஞ்சீரகம்
4)பூண்டு
5)மஞ்சள்

செய்முறை:-

உரலில் 5 அல்லது 6 சுண்டைக்காயை போட்டு இடித்துக் கொள்ளவும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு துண்டு சுக்கு,ஒரு பல் பூண்டை போட்டு இடித்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.ஒரு நிமிடத்திற்கு பிறகு இடித்த சுண்டைக்காய்,சுக்கு,பூண்டு சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

இறுதியாக சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த கசாயத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் நெஞ்சு சளி,இருமல்,செரிமான பிரச்சனை,குடற்புழு உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகும்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)சுண்டைக்காய்
2)மஞ்சள்
3)உப்பு
4)பூண்டு

செய்முறை:-

10 சுண்டைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.அதன் பின்னர் 2 பல் பூண்டை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் நறுக்கிய சுண்டைக்காய்,இடித்த பூண்டு சேர்த்து கொதிக்க விடவும்.அதன் பிறகு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் வாய்ப்புண்,குடற்புண்,நெஞ்சு சளி,இருமல்,செரிமான பிரச்சனை,குடற்புழு உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகும்.