Breaking News, Health Tips

மலச்சிக்கல் முதல் சர்க்கரை வரை.. வாரத்தில் 3 வேளை இந்த ஜூஸ் செய்து குடிங்க!!

Photo of author

By Divya

மலச்சிக்கல் முதல் சர்க்கரை வரை.. வாரத்தில் 3 வேளை இந்த ஜூஸ் செய்து குடிங்க!!

Divya

Button

இன்று பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு உடல்நல பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.முக்கியமாக மலச்சிக்கல்,சர்க்கரை போன்ற பாதிப்பை அதிகமானோர் சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்புகளில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து பானத்தை பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய் – ஒன்று
2)மாதுளை – ஒன்று
3)இஞ்சி – ஒரு துண்டு
4)கேரட் – ஒன்று
5)பீட்ரூட் – ஒன்று
6)கருவேப்பிலை – இரண்டு கொத்து
7)புதினா இலை – ஐந்து
8)கொத்தமல்லி – சிறிதளவு
8)தேன் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அதன் விதையை அப்புறப்படுத்திக் கொள்ளவும்.

அதன் பிறகு மாதுளம் பழத்தின் விதை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கேரட் மற்றும் பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஐந்து புதினா இலை மற்றும் கொத்தமல்லி தழையை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் நெல்லிக்காய் துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து மற்ற பொருட்கள் அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் இதை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி கலந்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.இரத்த சர்க்கரை பாதிப்பு கட்டுப்பட இந்த ஜூஸ் செய்து குடிக்கலாம்.இந்த ஜூஸை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தொடை மற்றும் அக்குள் கருமை மறைய.. இந்த பொடியைகுழைத்து அங்கு பூசி குளிங்க!!

வங்கிகளுக்கு மே மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை!!