நீரிழிவு முதல் மலச்சிக்கல் வரை.. சுரைக்காயை இப்படி பயன்படுத்திநால் 100% தீர்வு நிச்சயம்!!

Photo of author

By Divya

அதிக நீர்ச்சத்து நிரம்பிய காய்கறிகளில் ஒன்று சுரைக்காய்.இதில் வைட்டமின்கள்,பொட்டாசியம்,நார்ச்சத்து,இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது.சுரைக்காய் ஜூஸ்,சுரைக்காய் உணவுகளை உட்கொள்வதால் உடலுக்கு அதிகளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.

சுரைக்காயில் இருக்கின்ற நீர்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.பித்தம்,வாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் சுரைக்காயில் ஜூஸ் செய்து சாப்பிடலாம்.சுரைக்காயில் இருக்கின்ற பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

சுரைக்காய் ஜூஸ் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை வலுவாக்க முடியும்.கல்லீரல் அலர்ஜி இருப்பவர்கள் சுரைக்காய் ஜூஸில் சிறிது இஞ்சி சாறு கலந்து குடிக்கலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு சுரைக்காய் ஜூஸ் நல்ல பலனை கொடுக்கிறது.சுரைக்காயில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை போக்க உதவுகிறது.

உடல் சூடு தணிய,வெப்ப நோய்கள் ஏற்படாமல் இருக்க சுரைக்காயில் ஜூஸ் செய்து சாப்பிடலாம்.சிறுநீரக தொற்று குணமாக சுரைக்காயை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

சுரைக்காய் ஜூஸ் எப்படி செய்வது?

1)சுரைக்காய்
2)புதினா இலைகள்
3)எலுமிச்சை சாறு
4)கல் உப்பு

சிறிய சைஸ் சுரைக்காயை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டவும்.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய சுரைக்காய் துண்டுகள் மற்றும் ஐந்து புதினா இலைகளை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

இந்த சாற்றை ஒரு கிளாஸிற்கு ஊற்றி இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கல் உப்பை மிக்ஸ் செய்தால் ஆரோக்கியம் நிறைந்த சுரைக்காய் ஜூஸ் ரெடி.