மனிதர்களுக்கு எந்த நோய் பாதிப்பு எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது.தற்பொழுது உள்ள மோசமான வாழ்க்கை முறையால் பெரிய நோய்கள் சாதாரணமாக ஏற்படுகிறது.இப்படி எந்த நேரத்தில் உடல் நலப் பிரச்சனைகள் வரும் என்று தெரியாத நிலையில் நம் வாழ்க்கையை கடந்து சென்று கொண்டிருக்கின்றோம்.
சில நோய் பாதிப்புகளுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம் தேவைப்படும்.ஆனால் சில வகை நோய் பாதிப்புகளை முதலுதவி சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.அந்தவகையில் மயக்கம்,தலைவலி,வயிறு சூடு,உடல் வலி போன்ற பாதிப்புகளை உரிய முதலுதவி மூலம் குணப்படுத்த முடியும்.
தலைவலி பாதிப்பு ஏற்பட்டால் அதை கட்டைவிரல் கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.அதாவது கை கட்டை விரலின் சதைப்பகுதியில் அருகில் இருக்கின்ற விரல் கொண்டு இரண்டு நிமிடங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.இப்படி செய்தால் தலைவலி பாதிப்பு குணமாகும்.
ஒருவர் மயக்கம் போட்டு விட்டால் அவருக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.மயக்கம் அடைந்தவரின் உள்ளங்கால் கட்டை விரல் மற்றும் அருகில் இருக்கின்ற விரலுக்கு இடையில் உள்ள எலும்பின் மீது நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மயக்கம் அடைந்தவரின் மூக்கு பகுதிக்கு கீழ் உதடு பள்ளம் உள்ள இடத்தில் வைத்து அழுத்தம் கொடுத்தால் மயக்கம் தெளிந்துவிடும்.வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக கால் நடு விரல் மற்றும் இரண்டாவது விரலுக்கு இடையில் உள்ள எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்.இப்படி செய்தால் வயிறு வலி,வயிறு உப்பசம்,வயறு சூடு,உடல் வலி போன்ற பாதிப்புகள் குணமாகும்.
இதுபோன்ற அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் மயக்கம்,தலைவலி,வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகளில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம்.இது தவிர பல உடல் நலப் பிரச்சனைகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.எனவே அக்கு பஞ்சர் சிகிச்சையால் குணமாகும் நோய்கள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.