நம் ஊரில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த செடி,கொடிகள் சாலை,வேலியோரங்களில் படர்ந்து காணப்படுகிறது.இதில் கொடித்தொடை என்று அழைக்கப்படும் சிறுபூனைக்காலி கொடி வியந்து பார்க்கும் அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.
இந்த கொடியை நீங்கள் அனைவரும் நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.இந்த கொடியில் மஞ்சள் நிறத்தில் ஜெல்லி போன்ற பழம் காணப்படும்.இந்த பழத்தை கிராமப்புறங்களில் குரங்கு பழம் என்று அழைப்பர்.இப்பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை நிறைந்தவை ஆகும்.இந்த சிறு பூனைக்காலி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.
சிறு பூனைக்காலி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் என்ற ஒன்றை வாழ்நாளில் நீங்கள் சந்திக்க மாட்டீர்கள்.
செரிமானப் பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் இந்த கொடித்தொடை பழத்தை சாப்பிட்டால் அஜீரணக் கோளாறில் இருந்து விடுதலை கிடைக்கும்.
இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.
வயிற்றுப்போக்கு பிரச்சனை இருப்பவர்கள் இந்த பழத்தை அரைத்து நீரில் கலந்து பானமாக எடுத்துக் கொள்ளலாம்.
மயக்கம்,பதட்டம் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து மீள இந்த பழத்தை உட்கொள்ளலாம்.இரத்த சோகை பாதிப்பு இருப்பவர்கள் சிறு பூனைக்காலி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பலன் கிடைக்கும்.
ஆஸ்துமா,புற்றுநோய் போன்ற பாதிப்புகளில் இருந்து மீள இந்த பழத்தை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம்.
சிறு பூனைக்காலி கொடியின் பூவை உலர்த்தி பொடியாக்கி ஒரு கிளை வெது வெதுப்பான நீரில் கொட்டி தேன் சேர்த்து பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு பிரச்சனையை சந்தித்து வருபவர்கள் சிறு பூனைக்காலி பழத்தை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சிறு பூனைக்காலி கொடியின் இலையை வெயிலில் நன்கு உலர்த்தி பொடியாக்கி ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பூனைக்காலி இலை,பூ மற்றும் பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.