இளமை பருவத்தினர் முதல் முதுமை பருவத்தினர் வரை சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக இடுப்பு வலி,முதுகு வலி,கழுத்து வலி,கை கால் வலி போன்ற பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்புகள் ஏற்பட காரணம் கால்சியம் சத்து குறைபாடுதான்.
வைட்டமின் பற்றாக்குறை,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகளால் இதுபோன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.இளமை பருவத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.
எலும்புகள் வலிமை அதிகரிக்க சிறுதானிய உணவுகளை உட்கொள்ளலாம்.சிறுதானியங்களில் கால்சியம்,இரும்பு,நார்ச்சத்து,புரதம்,விட்டமின்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.ராகியில் செய்யப்பட்ட புட்டு,இடியாப்பம்,களி போன்ற உணவுகளை சாப்பிட்டு வந்தால் எலும்பு சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.
சாமை அரிசியில் புரதம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.சாமை அரிசியை சமைத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு,இடுப்பு எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.கருப்பு கவுனி அரிசியை அரைத்து புட்டு,கொழுக்கட்டை,கஞ்சி போன்றவற்றை செய்து உட்கொண்டு வந்தால் மூட்டு வலி,இடுப்பு வலி போன்ற பாதிப்புகள் குணமாகும்.
அடுத்து உணவு உட்கொண்ட பிறகு சல்லாக்கி என்ற சித்த மருந்தை உட்கொள்ளலாம்.இது எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.இந்த சல்லாக்கி மருந்தை உணவு உட்கொண்ட பிறகு 500 முதல் 600 மில்லி கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி,இடுப்பு வலி போன்ற பாதிப்புகள் குணமாகும்.இந்த சல்லாக்கி மருந்து அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.இந்த மருந்து குதிகால் வலி,கை கால் வலியையும் சரி செய்யும்.
அலோபதி அல்லாத தீர்வாக இது திகழ்கிறது.இந்த மருந்தை சரியான அளவு சாப்பிட்டு வந்தால் வாழ்நாள் முழுவதும் எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சந்திக்காமல் இருக்கலாம்.