உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வெண் தாமரை இதழில் தேநீர்,கஷாயம் செய்து பருகலாம்.
வெண் தாமரை இதழ் பயன்கள்:
**உடல் சூட்டை தணிக்க வெண் தாமரை இதழ் பயன்படுகிறது.கண் எரிச்சல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் குணமாக வெண் தாமரை இதழ் தேநீர் செய்து பருகலாம்.
**உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த வெண் தாமரை இதழ் தேநீர் செய்து பருகலாம்.மன அழுத்தம் கட்டுப்பட வெண் தாமரை இதழ் பானம் செய்து பருகலாம்.
**வெண் தாமரை கஷாயம் செய்து பருகினால் இதய ஆரோக்கியம் மேம்படும்.ஜன்னி பாதிப்பை வெண் தமாரை கஷாயம் மூலம் சரி செய்யலாம்.
வெண் தாமரை தேநீர்:
தேவையான பொருட்கள்:
1)வெண் தாமரை இதழ்
2)ஏலக்காய்
3)வெள்ளை கற்கண்டு
4)எலுமிச்சை சாறு
5)இஞ்சி
6)சீரகம்
செய்முறை விளக்கம்:
**முதலில் ஒரு வெண் தாமரை பூவின் இதழை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதழ்களை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
**அடுத்ததாக ஒரு ஏலக்காயை உரலில் போட்டு இடித்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு துண்டு தோல் நீக்கிய இஞ்சி மற்றும் சீரகம் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
**பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றுங்கள்.தண்ணீர் சூடானதும் வெண் தாமரை இதழ்களை அதில் போட்டுக் கொள்ளுங்கள்.
**பிறகு இடித்த ஏலக்காயை அதில் போடுங்கள்.பிறகு தோல் நீக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகத்தை அதில் போட்டுக் கொள்ளுங்கள்.
**அதன் பின்னர் தேவையான அளவு வெள்ளை கற்கண்டு போட்டு குறைந்த தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள்.
**பிறகு இந்த வெண் தாமரை பானத்தை கிளாஸ் ஒன்றிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறை அதில் பிழிந்து காலை நேரத்தில் பருகுங்கள்.இந்த வெண் தாமரை தேநீரை தினமும் பருகி வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
உயர் இரத்த அழுத்தம்,மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் குணமாக இந்த பானத்தை தினமும் பருகி வரலாம்.அல்சர் பாதிப்பை குணப்படுத்த இந்த தேநீர் பருகலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.