நம் முன்னோர்கள் காலத்தில் பல்வேறு மூலிகை மரங்கள் கண்டறியப்பட்டு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டது.குறிப்பாக அசோக மரத்தில் இருந்து கிடைக்கும் இலை,பூக்கள்,பட்டை என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக காணப்படுகிறது.
அசோக மரப்பட்டை உடல் நோய்கள் முதல் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் வரையிலான பாதிப்புகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.அசோக மரப்பட்டையை தண்ணீர் விட்டு அரைத்து சருமத்தில் பூசி குளித்து வந்தால் சகல சரும வியாதிகளும் விடும்.
அசோக மரப்பட்டை பொடி நாட்டு மருந்து கடை,சித்தவைத்திய சாலையில் கிடைக்கிறது.இதை வாங்கி வந்து ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் குடலில் உருவாகிய புழுக்கள் வெளியேறும்.அசோகமரப்பட்டையை பொடித்து தினமும் உட்கொண்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மூலம் அதாவது பைல்ஸ் பாதிப்பு இருப்பவர்கள் இந்த அசோகமரப்பட்டையை பொடித்து தயிர்,இளநீர் போன்ற குளிர்ச்சியான பொருட்களில் கலந்து சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் புண்கள் ஆறும்.அசோகமரப்பட்டையை பொடித்து டீ செய்து குடித்தால் உடல் உறுப்புக்கள் ஆரோக்கியம் மேம்படும்.
அசோக மரப்பட்டையை தண்ணீர் விட்டு அரைத்து மூட்டு பகுதியில் பூசினால் வலி,வீக்கம் குணமாகும்.அசோக மரப்பட்டையை பொடித்து ஒரு கிளாஸ் தண்ணீருக்கு 10 கிராம் அரோசக மரப்பட்டை தூள் சேர்த்து காய்ச்சி குடிக்கும் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு ஏற்படாது.
அதிக உதிரப்போக்கு,மாதவிடாய் கால வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் அகல அசோக மரப்பட்டையை மருந்தாக உட்கொள்ளலாம்.பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கட்டி குணமாக அசோக மரப்பட்டையை பொடித்து 100 மில்லி தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.