நம் ஊர் வயல் ஓரங்களிலும்,வரப்பு,சாலை ஓரங்களிலும் படர்ந்து வளரும் மூக்கிரட்டை கீரை நம்ப முடியாத மருத்துவ குணங்களை தனக்குள் குவித்து வைத்திருக்கிறது.இந்த கீரை தானாக படர்ந்து வளர்ந்து கிடப்பதால் இதன் அருமை பலருக்கும் தெரிவதில்லை.
மணத்தக்காளி,பசலை,பாலக் கீரை போன்றவற்றை தேடி தேடி வாங்கி உண்ணும் நாம் மூக்கிரட்டை போன்ற கீரையின் மகத்துவம் தெரியாத காரணத்தால் அதன் பலனை தவறவிட்டு விடுகின்றோம்.
மூக்கிரட்டை கீரை உடலில் உள்ள பல வியாதிகளை குணப்படுத்துகிறது.சிறுநீரக கல்,கல்லீரல் பாதிப்பு,பித்தப்பை போன்ற உறுப்புகளில் பிரச்சனைகளுக்கு அருமருந்தாக இந்த மூக்கிரட்டை திகழ்கிறது.
இந்த மூக்கிரட்டை கீரை ஆயுர்வேத மருத்துவத்தில் பல நன்மைகளை கொண்டிருக்கிறது.மூக்கிரட்டை கீரையின் பூக்கள் ஊதா நிறத்திலும் இலை பச்சை நிறத்திலும் இருக்கும்.இவை தரையில் படர்ந்து வளரக் கூடிய கீரையாகும்.நம் முன்னோர்கள் காலத்தில் இந்த கீரை உணவாக எடுத்துக் கொள்ளப்பட்டது.தற்பொழுது இந்த கீரையின் பயன்பாடு முற்றிலும் குறைந்துவிட்டது.
மூக்கிரட்டை கீரை பயன்கள்:
1)சர்க்கரை நோயாளிகளின் இன்சுலின் அளவை மேம்படுத்த மூக்கிரட்டை கீரையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
2)சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் மூக்கிரட்டை கீரையை சாப்பிட வேண்டும்.சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்கும் ஆற்றல் மூக்கிரட்டை கீரைக்கு உண்டு.
3)கண் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக மூக்கிரட்டை கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
4)கல்லீரல் மற்றும் பித்தப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதியடைந்து வருபவர்கள் மூக்கிரட்டை கீரையை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
மூக்கிரட்டை கீரையை உலர்த்தி பொடித்து பயன்படுத்தி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.மூக்கிரட்டை கீரை கிடைக்காதவர்கள் இவை பொடி வடிவில் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அதை வாங்கிக் கொள்ளலாம்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.அடுத்து மூக்கிரட்டை பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் போட்டு கொதிக்க வைத்து பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.