கல்லீரல் முதல் சிறுநீரகம் வரை.. உடல் உறுப்புகளுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகள்!!

Photo of author

By Divya

கல்லீரல் முதல் சிறுநீரகம் வரை.. உடல் உறுப்புகளுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகள்!!

Divya

நமது உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.ஆனால் இன்று நாம் யாரும் ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவதில்லை.உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அதிகரித்து வருகிறது.நம் உடல் உறுப்புகளில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற ஆரோக்கியத்தை பாதுகாக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கல்லீரல் கழிவுகளை அகற்றும் உணவுகள்:

**மஞ்சள்
**இஞ்சி
**எலுமிச்சை
**பூண்டு

தினமும் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் கலந்து குடித்தால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.இஞ்சியை இடித்து பானம் செய்து குடித்தால் கல்லீரலில் தேங்கிய கழிவுகள் அகலும்.

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கல்லீரல் கழிவுகள் நீங்கும்.தினமும் ஒரு பச்சை பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் கொழுப்பு படியாமல் இருக்கும்.

நுரையீரல் கழிவுகளை அகற்றும் உணவுகள்

**எலுமிச்சை
**ஆரஞ்சு
**இஞ்சி

தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நுரையீரலில் சளி,நச்சுக் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.அதேபோல் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் நுரையீரல் கழிவுகள் நீங்கும்.இஞ்சி டீ செய்து குடித்து வந்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.

சருமம் பளபளக்க இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:

**பீட்ரூட்
**கேரட்
**ஆப்பிள்

தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.பீட்ரூட்,கேரட் ஆகியவற்றை ஜூஸாக செய்து குடித்து வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.ஆரஞ்சு பழம்,பப்பாளி பழம் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

சிறுநீரக ஆரோக்கியம் மேம்பட சாப்பிட வேண்டிய உணவுகள்:

**வெள்ளரி
**எலுமிச்சை
**தர்பூசணி

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் வெளியேறும்.தர்பூசணி பழத்தை ஜூஸாக செய்து குடித்தால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.அதேபோல் வெள்ளரி மற்றும் எலுமிச்சை ஜூஸ் செய்து குடித்து வந்தால் சிறுநீர்கத்தில் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.

இரத்தக் கழிவுகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்:

**மாதுளை
**ஆரஞ்சு
**இஞ்சி
**கறிவேப்பிலை

மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கின்ற கழிவுகள் நீங்கி இரத்தம் சுத்தமாகும்.