2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே மிகப் பெரிய கட்சிகளில் உட்கட்சி பூசல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. அதிமுகவில் தொடங்கி பாஜக என தொடர்ந்து வரக்கூடிய இந்த உட்கட்சி பூசலில் தற்பொழுது பாமகவும் சிக்கியிருக்கிறது. ஏற்கனவே பல்வேறு உட்கட்சி பூசல்களை சந்தித்திருக்கக்கூடிய பாமகவில் தற்பொழுது பாமகவுக்கு இனி நான் மட்டுமே தலைவர் என ராமதாஸ் அறிவித்திருப்பது தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
திண்டிவனம் அருகே இருக்கக்கூடிய தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருப்பதாவது :-
சாதிவாரி கணக்கெடுப்பு அரசு பள்ளிகளின் மேம்பாடு ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கீடு போன்ற முக்கிய தகவல்களை பகிர்ந்த ராமதாஸ் இதை தொடர்ந்து 1980ல் வன்னிய சங்கம் தொடங்கிய காலத்தில் மருத்துவ பணியாற்றி கொண்டே கிராமங்களுக்கு சமூக பணியாற்றி மக்கள் மனதில் தான் இடம் பிடித்ததாகவும் அதனை தொடர்ந்து மக்களுக்காக என்னென்ன வருடங்களில் என்னென்ன விஷயங்களுக்காக தான் முற்பட்டேன் என்பதையும் விளக்கி கூறியிருக்கிறார்.
உரிமை போராட்டங்களில் தான் கைதியாகி பாளையம்கோட்டை சிறைக்கு சென்றது தவிர மற்ற மத்திய சிறைகளிலும் அடைக்கப்பட்டதாகவும் இதனால் தனக்கு உடல் நலம் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பாமக தொண்டர்களால் தான் உயிர் பெற்றேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு, தான் என்றுமே சட்டப்பேரவைக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ செல்ல ஆசைப்படவில்லை என்றும் இனியும் இதுபோன்ற ஆசைகள் தனக்கு கிடையாது என்றும் தெரிவித்த அவர் லட்சக்கணக்கான பாட்டாளி மக்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான் தனக்கு மிகப்பெரிய பதவியாகவும் கூறியிருக்கிறார்.
குறிப்பாக, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை பாமக நிறுவனரான தானே எதிர்கொள்ள இருப்பதாகவும் இனி தலைவராக நானே பொறுப்பேற்று கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அன்புமணியின் செயல் தலைவராக செயல்படுவார் என்றும் கௌரவ தலைவராக ஜி கே மணி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தொடர்ந்து செயல்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். பாமகவின் உடைய மாமல்லபுரம் மாநாடு மே 11 ஆம் தேதி வெற்றிகரமாக நடக்க பாமகவினர் அனைவரும் இணைந்து நல்லபடியாக செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
திடீரென சீல் செய்யப்பட்ட கவர் ஒன்றை எடுத்து பிரித்த அருகில் இருக்கக்கூடிய வருடம் இன்றைய தேதி ஏப்ரல் 10 தானே எனக்கேட்டவாறு அந்த கடிதத்தில் ராமதாஸ் கையெழுத்திட்டு இனி நானே பாமகவின் தலைவராகவும் செயல்படுவேன் என குறிப்பிட்டது பாமக தொண்டர்களை மிகப்பெரிய குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.