நட்சத்திர விடுதிகளில் இனிமேல் இந்த கட்டணம் உயர்வு!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
மதுபான விற்பனை உரிமம் பெறுவதற்கான கட்டணம் தற்போது நட்சத்திர விடுதிகளில் உயர்த்தப்பட்டுள்ளது.
நட்சத்திர விடுதிகளில் மதுபானம் விற்பனை செய்ய உரிமம் பெறுவதற்கான கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வின் அடிப்படையில் பைவ் ஸ்டார் தரத்திலான ஹோட்டல்களில் மதுபானம் விற்பதற்கான உரிமம் பெற கட்டணம் இதுவரை இருந்த கட்டணமான ரூ.20 லட்சத்திலிருந்து 5 லட்சம் அதிகரித்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் 4 ஸ்டார் தரத்திலான ஹோட்டல்களில் இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணமான ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் ஆக மதுபானம் விற்பதற்கான உரிமம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து 3 ஸ்டார் தரத்திலான ஹோட்டல்களிலும் இதே போல் உரிமம் கட்டணம் ரூபாய் 8 லட்சத்திலிருந்து ரூபாய் 10 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக பாட்டிலுக்கு விலை வசூலிக்கப்படுகிறது என்று புகார்கள் வந்ததை தொடர்ந்து தற்போது அங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் அறிவித்ததால் அந்த புகார் முடிவுக்கு வந்தது.
இந்த சூழ்நிலையில் நட்சத்திர விடுதிகளில் மதுபான விற்பனை உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை தமிழக அரசு மென்மேலும் உயர்த்தி உள்ளதால் அங்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையும் கணிசமான அளவில் உயரும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியானது மது பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.