வயல் ஓரங்களில் வளர்ந்து நிற்கும் மூலிகை தான் நிலத்துத்தி.இதற்கு பழம்பாசி என்ற மற்றொரு பெயரும் உண்டு.சிறு இலைகள்,மஞ்சள் பூக்கள் கொண்ட இந்த பழம்பாசி பல்வேறு நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறது.
இந்த பழம்பாசி செடியின் வேர்,இலை,பூ அனைத்தும் மருத்துவ குணம் மிக்கதாக உள்ளது.இந்த செடியின் வேர் பெண்களின் வெள்ளைப்படுதலை சரி செய்ய உதவுகிறது.பிரசவிக்கும் பெண்களுக்கு பழம்பாசி வேரில் லேகியம் தயாரித்து கொடுப்பதை கொடுப்பார்கள்.பிரசவத்திற்கு பிறகு பழம்பாசி வேரில் கஷாயம் செய்து கொடுப்பார்கள்.இப்பொழுது இந்த பழம்பாசி கஷாயம் மெடிக்கல் ஷாப்பில் கூட கிடைக்கிறது.
பழம்பாசி வேரில் இருந்து தயாரிக்கப்படும் லேகியம் சுகப்பிரசவத்திற்கு வழி வகுக்குகிறது.பழம்பாசி வேரை அரைத்து பாலில் கலந்து பருகினால் மஞ்சள் காமாலை விட்டுப்போகும்.
நரம்பு தளர்ச்சி,இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் பழம்பாசி வேரை அரைத்து\
கொதிக்க வைத்து பருகலாம்.இது இரத்த சோகைக்கும் மருந்தாக திகழ்கிறது.புண்களை குணமாக்க பழம்பாசி வேரை விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவிட்டு தடவலாம்.
பழம்பாசி இலையை அரைத்து மோரில் கலந்து பருகி வந்தால் சிறுநீரக கடுப்பு மற்றும் எரிச்சல் குணமாகும்.பழம்பாசி இலையை சீரகத்துடன் அரைத்து மோரில் கலந்து பருகி வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் சரியாகும்.பழம்பாசி இலையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து பருகி வந்தால் பைல்ஸ் பாதிப்பு குணமாகும்.