பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் ஆனது இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து துறைகளிலும் உள்ள சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து வழங்கப்படும் மற்றும் கௌரவிக்கும் விருதாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா துறையில் உள்ள சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் மக்களை மகிழ்விக்கின்ற அனைத்து நடிகர்களுக்கும் கிடைத்து விடுவதில்லை. மாறாக அவர்களுடைய தனித்துவம் சிறந்த பண்பு போன்றவற்றின் அடிப்படையில் கொடுக்கப்படுபவை ஆகும். அவ்வாறு அக்காலம் தொட்டு இக்காலம் வரை தமிழ் சினிமாவில் பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்ற நடிகர்களின் வரிசைகளை இங்கு காண்போம்.
எம் கே ராதா :-
ஜெமினி நிறுவனத்தில் நிரந்தர நடிகராக பணியாற்றிய இவர் 50 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவருக்கு இந்திய அரசானது “பத்மஸ்ரீ” விருது கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளது.
ஜெமினி கணேசன் :-
காதல் மன்னன் என அழைக்கப்படும் ஜெமினி கணேசன் அவர்களுக்கு “பத்மஸ்ரீ” விருதழித்து இந்திய அரசு கௌரவித்துள்ளது. இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
சிவாஜி கணேசன் :-
நடிகர் திலகம் என அழைக்கப்படக்கூடிய சிவாஜி கணேசன் அவர்களுக்கு இந்திய அரசானது ” பத்மஸ்ரீ ” மற்றும் ” பத்மபூஷன் ” விருதுகளை வழங்கி சிறப்பித்து இருக்கிறது.
கமலஹாசன் :-
இந்திய அரசானது நடிகர் கமலஹாசன் அவர்களுக்கு ” பத்மஸ்ரீ ” மற்றும் ” பத்மபூஷன் ” ஆகிய 2 விருதுகளை வழங்கி சிறப்பித்திருக்கிறது.
ரஜினிகாந்த் :-
சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்திய அரசானது ” பத்மபூஷன் ” மற்றும் ” பத்மவிபூஷன் ” ஆகிய இரண்டு கருத்துகளை வழங்கி சிறப்பித்திருக்கிறது.
விஜயகாந்த் :-
கருப்பு எம்ஜிஆர் என்று அழைக்கப்படக்கூடிய நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு இந்திய அரசானது ” பத்மபூஷன்” விருது வழங்கி சிறப்பித்து இருக்கிறது.
விவேக் :-
விவேகமான மற்றும் முற்போக்கான சிந்தனையை கொண்ட நடிகர் விவேக் அவர்களுக்கு இந்திய அரசானது “பத்மஸ்ரீ” விருதழித்து பெருமைப்படுத்தியுள்ளது.
பிரபுதேவா :-
இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா அவர்களுக்கு இந்திய அரசாங்கம் “பத்மஸ்ரீ” விருதழித்து பெருமைப்படுத்தியுள்ளது.
அஜித் குமார் :-
நடிகர் மற்றும் ரேசர் ஆன அஜித்குமார் அவர்களுக்கு தற்பொழுது “பத்மஸ்ரீ” விருது வழங்க இருப்பதாக இந்திய அரசு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.