பல் வலி முதல் மூட்டு வலி வரை.. மருந்து மாத்திரை தூக்கிவீசிட்டு இந்த பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்கள்!!

Photo of author

By Divya

பல் வலி முதல் மூட்டு வலி வரை.. மருந்து மாத்திரை தூக்கிவீசிட்டு இந்த பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்கள்!!

Divya

மருத்துவ செலவை குறைக்க பயனுள்ள பாட்டி வைத்திய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.பின்பற்றி பலன் பெறுங்கள்.

1)உடல் சூடு

வாரம் ஒருமுறை நல்லெண்ணெயை தலைக்கு வைத்து குளித்து வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.தலை முதல் பாதம் வரையிலான சூடு குறைய நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளலாம்.

2)பல் வலி

சுக்கு மற்றும் கிராம்பு ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து பவுடராக அரைத்து பல் மீது அப்ளை செய்து வந்தால் பல் வலி குறையும்.

3)தூக்கமின்மை

ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.மன அழுத்தம் நீங்க ஜாதிக்காய் பால் பருகலாம்.

4)ஆஸ்துமா

தூதுவளை இலையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் ஆஸ்துமா பாதிப்பு குணமாகும்.கரும்பு சாறில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா குணமாகும்.

5)மூக்கடைப்பு

சின்ன வெங்காயத்தை இடித்து சாறு எடுத்து நாசி துளையில் விட்டால் மூக்கடைப்பு பாதிப்பு குணமாகும்.

6)முதுகு வலி

நல்லெண்ணெயில் சூடாக்கி இடுப்பு பகுதியில் ஊற்றி அப்ளை செய்தால் முதுகு வலி பாதிப்பு குணமாகும்.

7)தொண்டைப்புண்

சுக்கு,கருப்பு மிளகு,அதிமதுரம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு 150 மில்லி தண்ணீர் ஊற்றி காய்ச்சி குடித்தால் தொண்டைப்புண் குணமாகும்.

8)மலட்டுத் தன்மை

கரு மிளகு,திப்பிலி,அதிமதுரம்,சுக்கு மற்றும் மூக்கிணாங்கிழங்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து ஒரு கப் காய்ச்சி குடித்து வந்தால் மலட்டு தன்மை நீங்கும்.

9)மாரடைப்பு

ஒரு கிளாஸ் பாலில் ஒரு தேக்கரண்டி கடுக்காய் பொடி போட்டு கலந்து குடித்தால் மாரடைப்பு பாதிப்பு வராமல் இருக்கும்.

10)மூட்டு வலி

தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணையை சூடாக்கி சூடத்தை போட்டு கலந்து மூட்டு பகுதியில் தடவினால் வலி மாயமாகும்.