அல்சர் முதல் மலச்சிக்கல் வரை.. ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதையில் தீர்வு உள்ளது!!

அல்சர் முதல் மலச்சிக்கல் வரை.. ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதையில் தீர்வு உள்ளது!!

தற்போதைய காலகட்டத்தில் உடல் நலக் கோளாறால் அவதியடைவரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ளாததே இதற்கு முக்கிய காரணம்.

எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வந்தால் உடலில் உள்ள பல பாதிப்புகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை,ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து கலந்து விடவும்.பின்னர் அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.

மறுநாள் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஊற வைத்த கொத்தமல்லி,சீரகம் மற்றும் சோம்பு நீர் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து விட்டு கொதிக்க வைத்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் அல்சர்,மலசிக்கல்,உடல் சூடு உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை
2)பனங்கற்கண்டு
3)தண்ணீர்

செய்முறை:-

முதலில் ஒரு கற்றாழை மடல் எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பிறகு அதில் இருக்கின்ற ஜெல்லை பிரித்து ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்யவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு சுத்தம் செய்த கற்றாழை துண்டுகளை அதில் போட்டு மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.பிறகு தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் மலசிக்கல்,உடல் சூடு,அல்சர் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.