ஆண்மை அதிகரிக்க வெண்ணையில் இந்த பொருட்களை வறுத்து பாலில் கலந்து குடியுங்கள்!!!

Photo of author

By Divya

இன்றைய நவீன உலகில் அனைவரும் மனம் மற்றும் உடல் சார்ந்த பாதிப்புகளால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.குறிப்பாக ஆண்கள் விந்தணு குறைபாடு,மலட்டு தன்மை,நீர்த்த விந்து வெளியேற்றம்,ஆண்குறி வீக்கம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு ஆண்மையை அதிகரிக்க இங்கு சொல்லப்பட்டுள்ள வைத்தியக் குறிப்பு கட்டாயம் உங்களுக்கு உதவும்.

தேவையான பொருட்கள்:

1)வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)நாட்டு சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
3)பேரிச்சம் பழம் – இரண்டு
4)பால் – ஒரு கிளாஸ்
5)பாதாம் பருப்பு – ஐந்து
6)முந்திரி பருப்பு – ஐந்து

செய்முறை:

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.பிறகு அதில் ஐந்து பாதாம் பருப்பு,ஐந்து முந்திரி பருப்பு மற்றும் விதை நீக்கப்பட்ட இரண்டு பேரிச்சம் பழம் போட்டு லேசாக வறுக்கவும்.

பிறகு அதை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்தவும்.

பின்னர் அரைத்த பொடியை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

பிறகு ஒரு கிளாசில் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்த பாலை வடிகட்டி குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:

1)வேர்க்கடலை – இரண்டு தேக்கரண்டி
2)பிஸ்தா பருப்பு – ஒரு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)பால் – ஒரு கிளாஸ்

செய்முறை:

அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி வேர்க்கடலை மற்றும் ஒரு தேக்கரண்டி பிஸ்தா சேர்த்து லேசாக வறுக்கவும்.பிறகு இதை பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் பால் ஊற்றி அரைத்த பவுடரை சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்து வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.