இந்த பகுதியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் மற்றும் ஆட்டோ கார் மீது கல்வீச்சு தாக்குதல்!

Photo of author

By Parthipan K

இந்த பகுதியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் மற்றும் ஆட்டோ கார் மீது கல்வீச்சு தாக்குதல்!

Parthipan K

Full blockade in this area! Stone pelting attacks on buses and autos!

இந்த பகுதியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் மற்றும் ஆட்டோ கார் மீது கல்வீச்சு தாக்குதல்!

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த  சோதனை நடத்தியதை கண்டித்து நேற்று கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.அந்த போராட்டத்தை தொடர்ந்து 900 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீச்சு ,ஆர்.எஸ்.எஸ் பாஜக அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் பெட்ரோல் குண்டுகளை பைக்கில் வீச முயற்சி செய்த சிலரையும் கைது செய்துள்ளதாக சட்ட ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து கோழிக்கோடு ,கொச்சி ,கொல்லம் ,ஆழப்புழா ,கண்ணூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவங்களில் பேருந்துகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.திருவனந்தபுரத்தில் ஆட்டோக்கள் மற்றும் கார்கள் மீதும் கற்கள் வீசப்பட்டதாக போலீசார்கள் கூறியுள்ளனர்.