முக்கிய மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறை – எங்கு தெரியுமா?

Photo of author

By Parthipan K

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது சில மாதங்களாக அடுக்கடுக்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. 

எனினும், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு இன்னும் முழுமையாக திரும்பவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. தற்போது குஜராத் மாநிலத்திலுள்ள, அகமதாபாத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

ஏனெனில் அங்கு கொரோனா தொற்று நோய் அதிக அளவில் பரவி வருவதால் 57 மணிநேர முழு ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அகமதாபாத்தில் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டுள்ளது. 

இதனால் அகமதாபாத்தில் மக்கள் நடமாட்டமின்றி நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் மீண்டும் கொரோனாவால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், ராஜ்கோட், சூரத், வதோத்ரா ஆகிய பகுதிகளிலும் இந்த முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. 

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் அனைத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த முழு ஊரடங்கு முறையானது அடுத்து வருகின்ற மூன்று நாட்களுக்கு பின்பற்றப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.