இம்மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு! உச்சத்தை தொட்ட கொரோனா எண்ணிக்கை!
கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் இந்த கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பமாகும் போதும் புதிய வழி முறையில் பரவுகிறது.இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வந்தாலும் அத்தடுப்பூசி கொரோனா வராமல் தடுப்பதற்காக அல்ல என மருத்துவர்களே கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அத்தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் நேர்ந்தாலும் அதனை எதிர் கொள்ள நமது உடலில் எதிர்ப்பு சக்தியாக அது செயல்படும் என கூறியுள்ளனர்.
கொரோனாவின் முதல் அலையை விட இந்த இரண்டாம் அலையினால் இந்தியா பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.பல உயிர்களை இழக்க நேரிட்டது.அதனை கட்டுப்படுத்த முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு அமல்படுத்தியும் கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த முடியா காரணத்தினால் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அதனையடுத்து அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் படியும் தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
இவ்வாறு முழு ஊரடங்கை அமல்படுத்தியதில் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பரவாலானது குறைந்து காணப்பட்டது.அதவாது தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் மட்டுமே தற்போது குறைந்து காணப்பட்டது.மீதமுள்ள 11 மாவட்டங்களில் தொற்று குறையாத நிலையில் தான் உள்ளது.அந்த 27 மாவட்டங்களில் ஒன்றான சென்னையில் தற்போது சற்று அதிகமாக கொரோனா தொற்றானது பரவி வருகிறது.ஓர் நாளில் மட்டும் சென்னையில் கொரோனா தொற்றுக்கு 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனையடுத்து தொற்று அதிகமுள்ள மாவட்டங்களான கோவை மற்றும் ஈரோட்டில் சற்றும் குறையாத நிலையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.
தற்போது கோவையில் ஓர் நாளில் மட்டும் 1227 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.அதேபோல ஈரோடு மாவட்டத்திலும் ஓர் நாளில் 1445 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.தொற்று எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்களில்,தொற்று குறையாத காரணத்தினால் மீண்டும் ஓர் வாரம் முழு ஊரடங்கு போடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.அதே போல தொற்று குறைந்த மாவட்டங்களில் தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அம்மாவடங்களிலும் முழு ஊரடங்கு போட வாய்ப்புகள் உள்ளது என சுற்றுவட்டாரங்கள் கூறி வருகின்றனர்.