இரு நாட்களுக்கு முழு ஊரடங்கா! தலைமை தேர்தல் அதிகாரியின் முடிவு!
கொரோனாவின் 2 வது அலையானது அதிக அளவு பரவி வருவதால் மக்கள் அனைவரையும் இத்தொற்று பெருமளவு பாதித்துள்ளது.அந்தவகையில் அதிக ளவு கொரோனா தொற்று பரவுளுக்கு காரணம் நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரம் தான் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.உயர்நீதிமன்றமும் அதிக அளவு கொரோனா தொற்று பரவலுக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம்,அதுமட்டுமின்றி தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றம் வழக்கையே சுமத்தலாம் என்று உயர்நீதி மன்றம் கூறியது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களின் உயிர்களை துச்சமாக நினைத்து கூட்டங்களை கூட்டியது,அவ்வாறு கூட்டிய போதிலும் முகக்கவசம் அணியாமலும்,சமூக இடைவெளி கடைபிடிக்காமலும் மக்கள் இருந்ததால் தற்போது அதிக அளவு தொற்று பரவி மக்கள் அதிகப்படியானோர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.தற்போது தேர்தல் முடிவுகள் மே 2- ம் தேதி வெளிவரும் நிலையில் தேர்தலுக்கு முன்பு முதல் இரு நாட்களுக்கு முழு ஊரடங்கு போட உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.
அந்த பரிந்துரையின் படி,சென்னையில் செய்தியாளர்களை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சந்தித்தார் அப்போது அவர் கூறியது,சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு சம்மதமாக தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என கூறினார்.ஞாயிறு அன்று வாக்கு பதிவு நடக்கும் அன்று 16,387 அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.
இவர்களுக்கெல்லாம் தகுந்த நடவடிக்கைகளை கடைபிடித்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தின் உள்நுழைய அனுமதிக்கப்படுவர் என கூறினார்.அதற்கடுத்து 98.6 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் வெப்பநிலை உள்ளவர்கள் வாக்கு எண்ணும் மையத்தினுள் அனுமதிக்க பட மாட்டர்கள்.அதேபோல தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.அதுமட்டுமின்றி அனைவரும் சமூக இடைவெளிகளை பின்பற்றியும்,முகக்கவசமும் அணிந்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.இதையெல்லாம் பின்பற்றாவதவர்களை வாக்கு என்னும் மையத்தினுள் அனுமதிக்க மாட்டர்கள் எனவும் கூறினார்.தற்போது தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிகம் தொற்று உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் கலந்தோசித்து வருகிறார்.அதன்படி சனிக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது எனவும்,ஞாயிற்றுகிழமை மட்டுமே முழு ஊரடங்கு எனவும் அமல்படுத்தியுள்ளனர்.மேற்கண்ட ஊரடங்கை பற்றிய தகவல்கள் திங்கட்கிழமைகளில் தெரிவிக்கப்படலாம் என்று சுற்று வட்டாரங்கள் கூறி வருகிறது.