தமிழகத்தில் இனி முழு ஊரடங்கு? முதல்வரின் அடுத்த நடவடிக்கை!
கொரோனா தொற்றானது வருடந்தோறும் பரிமாற்றமடைந்து புது தொற்றாக உருமாறி வருகிறது. அந்த வகையில் டெல்டா டெல்டா பிளஸ் ஆக இருந்த தொற்று தற்பொழுது ஒமைக்ரனாக உரு மாற்றம் அடைந்துள்ளது. இந்த தொற்றானது தென்னாப்பிரிக்க நாட்டில் உருவாகியது. தற்பொழுது அனைத்து நாடுகளிலும் தீவிரம் காட்டி பரவி வருகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு பண்டிகைகள் அடுத்து தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது.
பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் மக்கள் அதிக அளவு கூட்டம் கூடுவர். அதனால் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரிக்கக்கூடும். அதனை தடுக்க முழு ஊரடங்கு போடுவது குறித்து என்று ஆலோசனை கூட்டத்தில் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த முறை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது வரும் 20ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு எனவும்,வார இறுதி நாளான ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர். முதல் நாள் இரவு ஊரடங்கின் போது அரசாங்கம் கூறிய விதிகளை மீறி இரவு நேரத்தில் வெளியே சுற்றித் திரிந்த 546 வாகனங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல நேற்று முழு ஊரடங்கின் போதும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வந்த வாகனங்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல அரசு விதித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. இந்த வேளையில் இன்று தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் என அனைவருடனும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளார்.
தற்பொழுது தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸானது தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேற்கொண்டு தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு போடுவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து எந்தெந்த கட்டுப்பாடுகள் போடலாம் என்பதற்கான ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே இன்று ஆலோசனை கூட்டத்தில் மேலும் ஊரடங்கு குறித்து புதிதாக தகவல்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.