கொரோனாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் ஒமைக்ரான்!

0
76

கொரோனாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் ஒமைக்ரான்!

கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் மிக குறுகிய காலத்திலேயே பல நாடுகளுக்கும் பரவியது. தற்போதைய நிலவரப்படி இந்த ஒமைக்ரான் தொற்றானது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் இந்தியாவிலும் நுழைந்த இந்த ஒமைக்ரான் வைரஸ் பல மாநிலங்களிலும் வேகமாக பரவத் தொடங்கியது. அதன் காரணமாக இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து விட்டது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சியாளர்கள் ஒமைக்ரான் வைரஸ் தொற்று குறித்தும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சோதனை விவரங்களையும் பரிசோதனை செய்தனர். அவர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின்படி ஒமைக்ரான் வைரஸ் 3 வகையாக மாற்றம் அடைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான ஆய்வில் ஒமைக்ரான் வைரஸ் தற்போது 3 வகையாக மாறி வருகிறது எனவும் பிஏ.1, பிஏ.2 மற்றும் பிஏ.3 என மூன்று வழித் தோன்றல்களை கொண்டு இருப்பதாகவும் கூறுகின்றனர். இதில் பிஏ.1 குறைந்த வீரியம் மிக்கது எனவும் எனினும், மிகவும் அதிகமாக பரவக்கூடியதாகவும் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகவே இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது என தெரிவித்துள்ளனர். ஆகவே இனி வரும் காலங்களில் கொரோனாவின் தாக்கத்தை காட்டிலும் ஒமைக்ரானின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.

author avatar
Parthipan K